பழைய பகை – விஷாலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சேரன்

விஷால் எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது. அதில் ஒருவர் தான் இயக்குனர் சேரன். அதற்குக் காரணம் சேரன் இயக்கத்தில் விஷால் நடிக்க மறுத்ததே ஆகும். இதனால் சமயம் கிடைக்கும்போதெல்லாம் விஷாலை விமர்சனம் செய்யும் சேரன் தற்போது விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதை கடுமையாக எதிர்த்துள்ளார்.

சேரன் தன் ட்விட்டர் பக்கத்தில், ”முதல் களமிறங்கும்போதே பொய்முகத்தோடு நோக்கமேயின்றி யாரோட தூண்டுதலாலோ நிற்பதிலிருந்து வியாபாரக் குதிரை ஆகிவிட்டார் விஷால்.

நடிகர் சங்கத்தில் ஜெயித்தவுடன் முதலில் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிய விஷால் நாளை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரை வணங்கி மனுதாக்கல். ஏன்…?

விஷாலின் இந்த முடிவால் நடுத்தெருவில் நிற்கப்போவது தயாரிப்பாளகள். இனிவரும் எந்த அரசிடமிருந்தும் எதுவும் கிடைக்கப் போவதில்லை. மொத்தமாக தலையில் துண்டு.

தயாரிப்பாளர் நலன்கருதி விஷால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்பதே நல்லது.  இல்லையெனில் நிறைய “அசோக்குமார்களை” சங்கம் சந்திக்கும்.

இதை கருத்தில் எடுக்காமல் நாளை அவர் மனுதாக்கல் செய்தால் நாளை மறுநாள் முதல் நான்  சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவேன். தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யும்வரை” என்று சேரன் தெரிவித்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: