‘’தமிழ் ராக்கர்ஸுக்கு விரைவில் ஜெயில் தண்டனை’’ – தயாரிப்பாளர் சங்கம் உறுதி

தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக மட்டுமே இல்லாமல் கேன்சராகவே உருவெடுத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். இவர்களைத் தடுக்கவும், பிடிக்கவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கடும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டரில் “தயாரிப்பாளர்கள் சங்கம் எங்களது அனைத்து விளம்பர பிரச்சாரங்களையும் ரத்து செய்துள்ளது. காட்சிகளை ஓட்ட எங்களுக்கு நன்கொடை தேவைப்படுகிறது. உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள். நாங்கள் பேபால் கணக்கைத் தெரிவிக்கிறோம். எதுவே இந்த உலகத்தில் இலவசமாகக் கிடைப்பதில்லை” என்று தகவல் வெளியிடப்பட்டது.

இதற்கு பதிலடியாக “நாங்கள் உங்களை விரைவில் விரட்டுவோம்” என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ் ராக்கர்ஸுன் டிவிட்டரை பின்தொடரும் ரசிகர்களுக்கும்,

“விரைவில் அவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள். தமிழ் ராக்கர்ஸ் மரியாதையுடன் வெளியேறுவதற்கு இதுவே சிறந்த தருணம். இதுவொரு தொடக்கம் தான், அவர்களை அனைத்து இடங்களிலும் தடுக்கப் போவதை பார்க்கத்தான் போகிறீர்கள். ‘தலைவா’ என்ற வார்த்தைக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். தமிழ் ராக்கர்ஸ் ஒரு பிச்சைக்காரன்” என்று பதில் கொடுத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

You might also like More from author

%d bloggers like this: