‘’எனது இந்த முடிவுக்கு சீமானும், அவரது தம்பிகளுமே காரணம்’’ – சேரன் விரக்தி

படத்திற்குப் படம் தேசிய விருதுகளை குவித்த இயக்குனர் சேரன் தற்போது எந்தப் பட வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறார். அதே சமயத்தில் அரசியல் ரீதியான அதிரடிக் கருத்துக்களும் கூறி வந்தார். சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சி மீட்டிங்கில் கலந்து கொண்டு கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றோரின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சனம் செய்தார். அதுவும் அவரது டிவிட்டர் பதிவுகளில் அரசியல் கருத்துக்கள் அனல் பறக்கும். சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சியை தூக்கிப் பிடிப்பதாகவே இருக்கும்.

இந்நிலையில் இனி அவர் ஒரு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

‘’நண்பர்களே.. இனி அரசியல் சார்ந்து எந்த பதிவுகளும் நான் பதிவிடப் போவதில்லை. யாரைப் பற்றியும் பேசப் போவதில்லை. சினிமா சார்ந்து மட்டுமே பேசுவோம். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை. நான் சென்னை வந்தது சினிமா எடுக்க, அந்த வேலையை மட்டும் பார்க்கிறேன். என் கருத்துகள் இனி திரையில். அண்ணன் சீமான் அவர்களும் அவர்களின் அன்புத் தம்பிகளும் எனக்கு இந்த ஞானத்தை புத்தியை கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி…’’ என்று மிக விரக்தியோடு டிவிட்டரில் கூறியிருக்கிறார்.

இந்த பதிவில் சேரன் சீமான் மற்றும் அவரது தொண்டர்களால் ஏதோ ஒரு விஷயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதனால்தான் அவர்களை இப்பதிவில் மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கிறார் என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

You might also like More from author

%d bloggers like this: