ஆர்.கே.நகர் தேர்தல் ஆழம் பார்க்கும் விஷால்

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என சொல்லி அடித்து வெற்றிப் பெற்றார் விஷால். அதே சமயத்தில் அவ்வப்போது சமூகக் கருத்துக்களை கூறி வந்த விஷால் ‘’எதிர்காலத்தில் நான் அரசியலுக்கும் வருவேன்’’ என்றும் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் வரப்போகும் ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் சுயேச்சை வேட்பாளராக நிற்கிறார் என்ற தகவல் வெளியானது. இது குறித்து விஷால் தரப்பில் “விஷாலிடம் சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான். ஆனால், போட்டியிடுவது குறித்து அவர் எந்தவொரு முடிவையுமே எடுக்கவில்லை. தற்போது ‘இரும்புத்திரை’ இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தவிருக்கிறார்” என்று தெரிவித்தார்கள்.

ஆனால் பரப்பட்ட வதந்தி விஷாலின் ஆழம் பார்க்கும் செயலே என்றும் கூறப்படுகிறது.

You might also like More from author

%d bloggers like this: