‘மெர்சல்’ வசூல் விவகாரம் – மோதிக்கொண்ட தனஞ்செயனும் எஸ்.வி.சேகரும்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ அட்லீயின் காப்பி மற்றும் ஜிஎஸ்டி சர்ச்சைகளால் பரபரப்பாகப் பேசப்பட்டது.  தற்போது அசோக் குமார் தற்கொலை சம்பந்தமாக எழுந்த சர்ச்சையில் சில இயக்குனர்கள் “சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ கூட தயாரிப்பாளருக்கு தோல்விப் படம்தான்” என்று கருத்து தெரிவித்தார்கள்.

இவர்களின் கருத்துக்கு மாறாக தயாரிப்பாளர் தனஞ்செயன்

‘’மெர்சல் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக வெளியாகும் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். இதன் பின்னணியில் ஏதோ திட்டம் இருப்பதாகவே உணர்கிறேன். தயாரிப்பாளரே இது குறித்து ஏதும் பேசாத சூழலில் இத்தகைய கணக்குகளை மற்றவர்கள் எதன் அடிப்படையில் கூறுகின்றனர். என் கணக்கின்படி அந்தப் படம் லாபத்தையே தந்தது. உண்மை விரைவில் வெளிவரும்.

‘மெர்சல்’ திரைப்படம் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், காட்சியாளர்கள் என அனவைருக்குமே லாபத்தையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது எனது கருத்து. அப்படி இருக்கும்போது தயாரிப்பாளருக்கு மட்டும் அது எப்படி நஷ்டத்தை ஏற்படுத்த முடியும். தயாரிப்பாளரே கணக்கு வழக்குகளைத் தெரிவிக்கட்டும். மற்றவர்கள் ஊக அடிப்படையில் ஏதாவது கணக்குகளை கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’’

என்று சற்றுக் காட்டமாகவே கூறியிருந்தார்.

தனஞ்செயனின் இந்த பதிலுக்கு பதிலடி தரும் வகையில் நடிகரும் பிஜேபியை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பதிவில்

‘’இந்தப் படத்தின் மூலம் மிகுந்த லாபத்தை ஈட்டியதாக தயாரிப்பாளர் பகிரங்கமாக தெரிவித்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. லாபத்தில் நம் அரசாங்கத்துக்கு ஜிஎஸ்டியும் சென்றிருக்கும். இப்போதெல்லாம் சினிமா வெறும் சூதாட்டமாகவே இருக்கிறது. இந்த உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம். எதிர்தரப்பிலும் எந்த ஊகமும் வேண்டாம். மார்ச் 31 2018 வரை காத்திருப்போம்’’ என்று சொல்லியிருக்கிறார்.

You might also like More from author

%d bloggers like this: