அண்ணா துரை – விமர்சனம்

அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘அண்ணா துரை’. ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ வரிசையில் சூப்பர் ஹிட்டா, ‘சைத்தான்’, ‘எமன்’ போன்று ஆவரேஜா. இதில் அண்ணா துரை எந்த வரிசையில் என்று பார்ப்போம்.

கதை

அண்ணா துரை என்ற பெயரில் அண்ணன் விஜய் ஆண்டனி. தம்பி துரை என்ற பெயரில் தம்பி விஜய் ஆண்டனி.. இதில் அண்ணாதுரை ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். தம்பி தம்பிதுரை உள்ளூரில் பள்ளி ஒன்றில்  பி.டி மாஸ்டராக இருக்கிறார். தன் காதலியை கண்முண்ணே பறிகொடுத்த சோகத்தால் ஏற்படும் அண்ணாதுரையின் போதை பழக்கத்தால் ஜவுளிக் கடையும், தம்பியின் வேலையும் பறிபோகிறது. அத்துடன், கொலைப்பழி சுமத்தப்பட்டு ஜெயிலுக்கப் போகிறார் அண்ணாதுரை. 

ஏழு ஆண்டு ஜெயில் தண்டனை முடிந்து வரும் அண்ணாதுரை, தன் தம்பி ஒரு அரசியல்வாதியிடம் அடியாளாக மாறியிருப்பதைப் பார்த்து அதிர்கிறார். தன்னால் பாதிக்கப்பட்ட தமபியையும், குடும்பத்தையும் சீராக்க அண்ணாதுரை எடுக்கும் முயற்சிகளே மீதிக் கதை.  மெல்ல மெல்ல ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவரும் விஜய் ஆண்டனி, ஃ பேமிலி சென்டிமென்ட், ஆக்‌ஷன் கலவையில் நடித்திருக்கும் மற்றுமொரு படம். அண்ணாதுரை, தம்பிதுரை என இரு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டணி. 

ஆள்மாறாட்ட கதையில் படம் பார்க்கும் ஆடியன்சுக்கு அண்ணன் யார், தம்பி யார் என்று தெரியும். படத்தில் வரும் கேரக்டர்களுக்கு தெரியாது. ஆனால் இந்தப் படத்தில் அப்படியே உல்டா. ரசிகர்கள் அண்ணன் யார் தம்பி யார் என்று குழம்பிக் கொண்டிருக்கையில் கேரக்டர்கள் ஈசியாக ஆள்மாறாட்டம் செய்யும் அண்ணன் தம்பியை சரியாக அடையாளம் கண்டுகொள்வது படத்தின் ஆகப் பெரும் பலவீனம். 

தம்பிதுரைக்கு ஜோடியாக வரும் டயானா சாம்பிகா சைஸில் மட்டுமில்லை நடிப்பிலும் கவர்கிறார் நம்மை.  

நாயகியின் அப்பாவாக வரும் செந்தில் குமரன் யதார்த்த நடிப்பில் அசத்துகிறார். நாயகனின் அப்பா நளினி காந்த், அம்மா, நண்பன் காளி வெங்கட், அரசியல் தலைவர் ராதாரவி, ஜவுளிக்கடையை அபகரிக்கும் வில்லன் சேரன் ராஜ் ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர். 

அறிமுக இயக்குனர் சீனிவாசன். யதார்த்தமான எமோஷனல் ஆக்ஷன் கதையை எழுதியவர் விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கத் தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் முதல் காட்சியில் வரும் விபத்து காட்சி போல ஆங்காங்கே அட போட வைக்கிறார்.

ஹீரோவாக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் ஸ்கோர் செய்கிறார் விஜய் ஆண்டனி. பாடல்கள் ரொம்பவே சுமார். எடிட்டர் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துகள்.

மொத்தத்தில்

‘அண்ணா துரை’ – விஜய் ஆண்டனியின் கதைத் தேர்வின் கவனமின்மை.

You might also like More from author

%d bloggers like this: