விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது.

0

விஜய் சேதுபதியின் அடுத்த படம் ‘ரேணிகுண்டா’ புகழ் பன்னீர் செல்வம் இயக்க இருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தேனியில் பூஜையுடன் தொடங்கியது.

ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ்’ சார்பில் ஏ எம் ரத்னம் தயாரிக்கும் இந்த அதிரடி படத்தின் பெரும்பாலான காட்சிகள் தேனி மாவட்டத்தில் படமாக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க கிராமத்து பிண்ணனியில் உருவாகும் இந்த கதையில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது படக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டத்திலும், அதை சுற்றி இருக்கும் பகுதிகளிலும், சுமார் 70 நாட்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடிவுசெய்துள்ளர்கள். இப்பொழுது இந்த படத்தின் கதாநாயகிக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் மிக விரைவில் இந்த படத்தின் தலைப்பை, முதல் போஸ்டரோடு இணைத்து வெளியிட முடிவு செய்த்துள்ளனர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.