ஷங்கரின் அர்ப்பணிப்பை சிலாகிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஷங்கர் இயக்கத்தில் ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம்தான் 2.௦. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று துபாயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். தற்போது இசை வெளியீட்டு விழாவில் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிப் பேசி மகிழ்ந்தனர்.

இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியபோது, இயக்குனர் ஷங்கருடன் தனக்கு உள்ள நட்பைப் பற்றியும், ஷங்கரின் திறமையைப் பற்றியும் விலாவரியாகப் பேசினார்.

“இதுவரை எதுவுமே மாறவில்லை. எல்லாம் அப்படியே உள்ளன. ஷங்கர் இப்போதும் கடினமான, இயல்பான, தரம் குறித்த சிந்தனை உள்ள மனிதராகவே இருக்கிறார்.

எப்போதும் மற்றவர்களுக்கு முன்னோடியாக உள்ளார். ரசிகர்களை உற்சாகப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். அதற்காக, புதிது புதிதாக எதேனும் தர முயற்சிக்கிறோம். ஷங்கர் தன் வேலையின் மீது தீராத காதல் கொண்டவர். அவரது அர்ப்பணிப்பு எப்போதும் என்னைக் கவரும். அதேபோல், எனது வேலையும் அவரைக் கவருவதாகக் கூறுவார். இது பரஸ்பரப் புரிதல்” என்று தெரிவித்தார்.

You might also like More from author

%d bloggers like this: