‘’ரஜினியின் காதல் அலாதியானது’’ – தனுஷ் புகழாரம்

ஷங்கர் இயக்கத்தில் ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம்தான் 2.௦. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று துபாயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். தற்போது இசை வெளியீட்டு விழாவில் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிப் பேசி மகிழ்ந்தனர்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார்.

இவ்விழாவில் தனுஷ் பேசும்போது,

‘’இது இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த, பிரம்மாண்டமான படம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பெருமைப்படுகிறேன். கொஞ்சம் பிரபலமான நடிகர்களே சிறிது நேர வேலைக்குப் பிறகு கிளம்பிவிடும் நிலையில், ரஜினி மறுநாள் அதிகாலை வரை கூட அதே உற்சாகத்துடன் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். அவர் தன் வேலையின் மீது கொண்ட காதல் அலாதியானது. அதனால்தான் அவரைத் தேடி எல்லாம் வருகின்றன. அவர் எதையும் துரத்திப் போவதில்லை’’ என்று முத்தாய்ப்பாக முடித்தார்.

You might also like More from author

%d bloggers like this: