ரஜினிக்கும் முஸ்லீம்களுக்குமான தொடர்பு இதுதான்

ஷங்கர் இயக்கத்தில் ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம்தான் 2.௦. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று துபாயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். தற்போது இசை வெளியீட்டு விழாவில் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிப் பேசி மகிழ்ந்தனர்.

அதில் ரஜினிகாந்த் பேசும்போது முஸ்லீம்களுக்கும் அவருக்குமான தொடர்பைப் பற்றிப் பேசினார்.

‘’இப்போது தான் துபாய்க்கு முதல் முறையாக வந்துள்ளேன். பல நாடுகளுக்கு சென்றபோது துபாய்க்கு வருவேன், விமானத்திற்காக விமான நிலையத்திற்குள் இருந்துவிட்டு, விமானம் ஏறி போய்விடுவேன். இப்போது தான் முதல் முறையாக விமான நிலையத்தை விட்டு வெளியே வந்திருக்கிறேன். இந்திய மக்கள் பலரும் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு துபாய் அரசாங்கத்திற்கு இந்தியன் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஒரு பந்தம் இருக்கிறது. 1960-70களில் பேருந்து நடத்துநராக இருக்கும்போது, பல இஸ்லாமிய சகோதரர்களுடன் தான் இருப்பேன். சென்னைக்கு நடிக்க வாய்ப்பு தேடி வந்த போது, ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் ஓர் இஸ்லாமியர் தான். பெயர், புகழ் கிடைத்தவுடன் போயஸ் கார்டனில் சொந்த வீடு வாங்கினேன். அதுவும் ஓர் இஸ்லாமியரிடமிருந்துதான் வாங்கினேன். ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடமும் ஓர் இஸ்லாமிய சகோதரரிடமிருந்துதான் வாங்கினேன். இதுவரை பல படங்கள் நடித்திருந்தாலும், ஒரு படத்தின் பெயர் சொன்னால் அனைவருக்குமே தெரியும். அது ‘பாட்ஷா’. அதில் இஸ்லாமியராக தான் நடித்திருந்தேன்’’ என்று ரஜினி பேசபேச துபாய் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

You might also like More from author

%d bloggers like this: