ஷங்கருடன் மீண்டும் மூன்று படத்தில் சூப்பர் ஸ்டார்

ஷங்கர் இயக்கத்தில் ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம்தான் 2.௦. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று துபாயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். தற்போது இசை வெளியீட்டு விழாவில் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிப் பேசி மகிழ்ந்தனர்.

இயக்குநர் ஷங்கர் பேசியதாவது,

‘’ஓர் இந்தியப் படத்திற்கு 300 கோடி, 350 கோடி என முதலீடு செய்ய யாருமே தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இக்கதையைக் கேட்டு பிடித்ததினாலும், தமிழ் சினிமாவின் மீதுள்ள காதலாலும் தயாரித்திருக்கிறார். அதற்கு முதலில் நன்றி.

‘2.0’ திரைப்படம் ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சி அல்ல. இது வேறொரு கதைக் களம். உலகளாவிய ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறேன். நமக்கு பரிச்சயமான டாக்டர் வசீகரன், சிட்டி, 2.0 போன்றவர்கள் எல்லாம் இக்கதையில் வருவார்கள். இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே ‘2.0’. அக்கற்பனை என்னை எங்கெல்லாம் இழுத்துக் கொண்டு போனதோ அங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி, “முதல்வன்’ சமயத்திலிருந்தே ரஜினி சாரோடு படம் பண்ண வேண்டும் என்று பேசிக் கொண்டே இருந்துள்ளீர்கள். தற்போது அவரோடு இணைந்து 3 படம் செய்துவிட்டீர்கள் எப்படி இது சாத்தியம்?” என்று ஷங்கரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஷங்கர், “சூப்பர் ஸ்டாரை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியுமா… படம் பண்ணலாம் என்று பேசிப் பேசி 11 வருடங்கள் கழித்து தான் சாத்தியமானது. 3 படம் செய்து விட்டேன். கதை விவாதத்திற்காக கூர்க்கில் இருக்கும் போது, ஒரு குடும்பத்தினர் வந்தார்கள். “நீங்கள் 10 வருடம் முன்பு பிறந்திருக்கக் கூடாதா” என்றார்கள். “ஏன்?” என்றவுடன் “இன்னொரு 3 படம் ரஜினி சாரோடு செய்திருப்பீர்களே” என்றார்கள்

You might also like More from author

%d bloggers like this: