‘’இனி அஜித்தை யாரும் கலாய்க்கக் கூடாது’’ – உறுதி எடுத்த சிவா

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என மூன்று படங்களில் நடித்தார். இவற்றில் ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் ஹிட்டாயின. ஆனால் அஜித்தும், சிவாவின் டீமும் கடுமையாக உழைத்திருந்தும் ‘விவேகம்’ படம் தோல்வியடைந்தது. அது மட்டுமில்லாமல் விமர்சகர்கள் மத்தியில் கழுவியும் ஊற்றப்பட்டது. அஜித் ரசிகர்கள் மனம் உடைந்து போனார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கை பயங்கரமாகக் கிண்டலடித்தார்கள்.

இந்நிலையில் ‘விவேகம்’ தயாரிப்பு நிறுவனத்திற்கே அஜித்தும், சிவாவும் இணையப் போகிற படத்தின் கதை உருவாக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம் சிவா. எக்காரணத்தைக் கொண்டும் இப்படம் தோல்வி அடையவே கூடாது என்று உறுதியாக இருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் அஜித்தைக் கிண்டலடிக்க முடியாதபடி ஸ்கிரிப்டில் மட்டுமில்லாமல் அஜித்தின் கெட்டப்பிலும் முழுமையாக கவனம் செலுத்தப் போகிறாராம். எனவே இந்தப் படத்தில் அஜித் கருமையான முடியுடன் இளமையான தோற்றத்திலேயே நடிக்கப் போகிறாராம்.

இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கவிருக்கிறது.

You might also like More from author

%d bloggers like this: