‘’விஜய் முருகதாஸ் படத்தின் கேமராமேன் இவரா..!’’ – மெர்சலான விஜய் ரசிகர்கள்

விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் முதல் முறையாக இணைந்த ‘துப்பாக்கி’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்தார். அதற்கடுத்து இவர்கள் இணைந்த ‘கத்தி’ படத்திற்கு ‘ராஜாராணி’ புகழ் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இந்நிலையில் மூன்றாவது முறையாக விஜய்யும், முருகதாஸும் இணையும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்பவர் யாராக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து சினிமா ரசிகர்களுமே எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் மலையாள கேமராமேனான கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் மலையாளத்தில் சமீப கால ஹிட் படங்களின் கேமராமேன் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மலையாள சினிமாவில் பெரும் அதிர்வலையை உருவாக்கியதோடு அல்லாமல் வசூலிலும் சக்கைப் போடு போட்ட ‘அங்கமாலி டைரிஸ்’ படத்திற்கும் இவர்தான் கேமராமேன். கிரிஷ் கங்காதரன் வருகையால் தமிழ் சினிமா ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

You might also like More from author

%d bloggers like this: