‘’இனி சின்ன இளைய தளபதி’’ – ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

தான் நடிக்கும் படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ச்சியாக தம் கட்டி நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். ‘செம’, ‘நாச்சியார்’, ‘அடங்காதே’, ‘குப்பத்து ராஜா’, ‘ஐங்கரன்’ ஆகிய படங்கள் ரிலீசிற்கு ரெடியாக உள்ளன. இப்படி தான் உண்டு தன் வேலை உண்டு என்று பிசியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷின் இமேஜிற்கு ஆப்பு வைக்கும் ஒரு வதந்திக் கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. அதாவது அவர் இனி தன் படங்களில் ‘சின்ன இளைய தளபதி’ என்ற பட்டத்தைப் போட்டுக் கொள்ளப்போகிறார் என்று தகவல் பரவியது.

பதறிய ஜி.வி.பிரகாஷ் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில்,

தேவையற்ற செய்தி. யாரும் எந்தப் பெயரையும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள். விஜய் எனது சகோதரர். நான் அவரது ரசிகன், தம்பியைப் போன்றவன். இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புவதால் இவர்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும் எனத் தெரியவில்லை. இதுபோன்றவற்றைப் பார்க்கும்போது எரிச்சலாக வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

You might also like More from author

%d bloggers like this: