‘’ரஜினிகாந்த் நடிப்பில் என்னை விஞ்சிவிட்டார்’’ – அக்ஷய் குமார் பாராட்டு

2.௦ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக துபாய் சென்ற 2.௦ டீம் பத்திரிகையாளர்களை சந்தித்தது. ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அக்‌ஷய்குமார் பேசியபோது,

”இந்தப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ரஜினி சார் நடிப்பில் என்னை மிஞ்சிவிட்டார். இது முற்றிலும் எனக்கு வித்தியாசமான அனுபவம். ஷங்கர் ஓர் இயக்குநராக மட்டும் அல்லாமல் அறிவியலாளராகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

படத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஒப்பந்தத்தின் காரணமாக இதற்கு மேல் படத்தின் கதை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது’’ என்று கூறினார்.

You might also like More from author

%d bloggers like this: