2.௦ படத்தில் நடிக்க வைத்ததற்காக ஷங்கருக்கு நன்றி சொன்ன ரஜினிகாந்த்

‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்தான் 2.௦ இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் துபாயில் நடத்தி முடித்துள்ளது. 

இதற்கு முன்பு 2.௦ டீம் பத்திரிகையாளர்களை சந்தித்தது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.

அதில் ரஜினி பேசியபோது

‘’கடவுளின் கருணையாலும் மக்களின் அன்பாலும்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். ‘2.0’ படத்தில் என்னை நடிக்க வைத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி.

பெருமைமிக்க இந்தப் படத்தின் ஒரு பங்காக நான் இருப்பதில் மகிழ்ச்சி. இது நிச்சயம் பெருமைக்குரிய, பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். ‘2.0’ வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர்’’ என்று பெருமிதத்தோடுக் கூறினார்.

You might also like More from author

%d bloggers like this: