தயாரிப்பாளரை கதற வைக்கும் ஜெய்யின் அறிவு கெட்ட சுயநலம்

‘’புலியை பார்த்து பூனை சூடு போட்ட’’ கதை நம்மூரில் சொல்வதுண்டு. ஆனால் புலியை பார்த்து பூனை அல்ல எலி சூடு போட்ட கதை தெரியுமா..? அது இதுதான். அதாவது நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களுடன் அடிக்கடி ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக தன் படத்தின் ப்ரோமொஷனுக்குக் கூட பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை. ‘’அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம்’’ என்று யாரோ ஒரு முட்டாள் நடிகர் ஜெய்யின் காதில் ஓதிவிட்டார் போல. எனவே ‘’நானும் ஆவரேண்டா மாஸ் ஹீரோ’’ என்று பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் ஜெய்.

இந்நிலையில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சினீஷ் இயக்கி, சென்சார் செய்யப்பட்டு விரைவில் ரிலீசாகவிருக்கும் படம்தான் ‘பலூன்’. இந்தப் படத்தின் ப்ரோமொஷனுக்கு வர வழக்கம்போல மறுத்து விட்டாராம் ஜெய். ஜெய்யின் இந்த செயலால் அஞ்சலியும் இப்போது ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். இதனால் பல கோடிகளை கொட்டி இவர்களை வைத்து படமெடுத்தால் படத்தின் ஹீரோ, ஹீரோயினே ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன் என்கிறார்களே…?’’ என்று ‘பலூன்’ தயாரிப்பாளர் கதறிக் கொண்டிருக்கிறாராம்.

You might also like More from author

%d bloggers like this: