‘’முதல் வாய்ப்பை கொடுத்தவர் பாரதிராஜா. ஆனால்…?’’ – வைரமுத்து சொன்ன ரகசியம்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் இயக்குனர் ஐ.வி.சசி மிகச் சிறந்த இயக்குனராக விளங்கியவர். மலையாள சினிமாவிற்கு அவர் ஒரு பொக்கிஷம் என்றால் மிகையல்ல. நடிகர் கமல்ஹாசன், மோகன்லால் என சினிமாவில் கலையை நேசிக்கும் நண்பர்கள் வட்டத்தை வைத்திருந்தவர். அவரது மறைவிற்கு கமல்ஹாசன், மோகன்லால், பிரியதர்ஷன் போன்றோர் அஞ்சலி செலுத்திய நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

”திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி மறைவுச் செய்தி என்னை அதிர வைத்தது.புகழ்மிக்க ஒரு தென்னிந்திய இயக்குநரை இந்திய சினிமா இழந்துவிட்டது. அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். பாராதிராஜாவின் நிழல்கள் நான் பாட்டெழுதிய முதல் படம் என்றாலும், திரையில் முதன்முதலில் வெளிவந்தது ரஜினி நடித்து ஐ.வி.சசி இயக்கிய காளி என்ற படமாகும். அந்த வகையில் அவர்மீது எனக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு.

கலையே வாழ்வு; வாழ்வே கலை என்று வாழ்ந்தவர் மறைந்துவிட்டார். மலையாள மண் இந்திய சினிமாவுக்குத் தந்த கலைக் கருவூலத்தைக் காலம் திருடிவிட்டது. அவர் புகழ் இந்திய சினிமாவில் என்றென்றும் வாழும். அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலை உலகத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வைரமுத்து தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: