நிவின்பாலிக்கு ஜோடி நயன்தாரா!

நயன்தாராவை நிவின்பாலிக்கு ஜோடியாக்க இயக்குனர் வினீத் சீனிவாசன் முயற்சி செய்து வருகிறார்.

நிவின்பாலியை மலையாள சினிமாவில் அறிமுகப்படுத்தி அவருக்கு பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் வினீத் சீனிவாசன். இவர் நிவின்பாலியை ஹீரோவாக வைத்து ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்ஜியம்‘ என்கிற சூப்பர்ஹிட் வெற்றியை கொடுத்தவர். தற்போது இயக்கும் ஒரு படத்தில் நயன்தாராவை நிவின்பாலியுடன் ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

 வினீத்தின் தம்பி தயன் சீனிவாசனும் இப்போது சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் தயன் சீனிவாசன் நடிப்பை கைவிட்டுவிட்டு, டைரக்ஷனில் நுழைய விரும்புகிறார் அதனால் அவரது முதல் படத்தை வெற்றியாக்கும் முயற்சியில் அந்தப்படத்திற்கு கதை எழுதி வருகிறார் வினீத் சீனிவாசன்.. தான் நிவின்பாலியை அறிமுகப்படுத்தி, தானும் இயக்குனராக அறிமுகமானதுபோல, தனது தம்பி இயக்கும் படத்திலும் நிவின்பாலி தான் ஹீரோ என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்.

படத்தை வெற்றிப்படமாக்க நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்கவைக்கும முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் வினித் சீனிவாசன்.

You might also like More from author

%d bloggers like this: