‘’சர்வாதிகாரம் வேண்டாம்…!’’ – மத்திய அரசிற்கு கமல் கருத்து

என்னதான் மாநில அரசை கழுவி ஊற்றினாலும் அவ்வப்போது மத்திய அரசிற்கு,ம் குட்டு வைக்கத் தவறுவதில்லை.  திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு ஆதரவாகவும் மத்திய அரசின் தலையில் நங்கென்று குட்டு வைப்பது போலவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘’சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அந்நாட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நமது தேசியகீதத்தை ஒளிபரப்பலாம்.  எனது தேசபக்தியை பொது இடங்களில் நிரூபிக்க கட்டாயப்படுத்தி பரிசோதிக்காதீர்கள்.

விவாதங்களில் சிங்கப்பூரைப் பற்றி பலரும் உதாரணம் பேசுகின்றனர். சிங்கப்பூரில் இருப்பது கருணைமிக்க சர்வாதிகாரமே என்பதே சில விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. நமக்கும் அதுபோன்ற சூழல் வேண்டுமா? வேண்டாமே…!’’ என்று அதில் பதிவு செய்துள்ளார்.

 

You might also like More from author

%d bloggers like this: