விஷால் ஆபிசில் சோதனை மத்திய அரசின் ‘பழிவாங்கல்’

‘மெர்சல்’ படத்தின் பாஜக பிரச்சினையில் ஒரு பேட்டியில் ‘மெர்சல்’ படத்தை ‘’நெட்டில்தான் பார்த்தேன்’’ என்று ஹெச்.ராஜா சொல்ல, கொதித்தெழுந்து விட்டார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால், ஹெச்.ராஜாவை ‘’வெக்கமே இல்லையா உங்களுக்கு…?’’ என்று திட்டிவிட்டு, உடனடியாக மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.

இதன் விளைவாக பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு விஷால் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். மத்திய கலால் வரித்துறையின் கீழ் உள்ள ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒருமணி நேரமாக இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

விஷாலின் தயாரிப்பு நிறுவனம் ஜிஎஸ்டி வரியை முறையாக செலுத்துகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் விஷால் தரப்பினர் ஆவணங்களைச் சரிபார்க்க வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த திடீர் சோதனையின் போது விஷாலும், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரும் அங்கு இல்லை.

You might also like More from author

%d bloggers like this: