‘’கீழ்புத்தி கொண்ட ஹெச்.ராஜா’’ – பிரித்து மேய்ந்த பிரசன்னா

பாஜக தலைவர்களுக்கு வாயில்தான் சனி என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது.  ‘மெர்சல்’ படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நாடெங்கும் பாஜகவிற்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது. இந்நிலையில் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்.” என்று ட்வீட்டினார்.

விஜய் ஒரு கிறிஸ்துவர் என்று மதரீதியில் ட்வீட்டியதால், இணையத்தில் பெரும் சர்ச்சை உருவானது. பலரும் எச்.ராஜாவை கடுமையாக சாடினார்கள்.

இதற்கு பதிலடியாக நடிகர் பிரசன்னா, “பாஜகவுக்கு முதல் எதிரி நீங்களும் உங்கள் மாநிலத் தலைவரும்தான். இருப்பை காட்டிக்கொள்ள பிதற்றாதீர். பல்லிளிக்கிறது உங்கள் கீழ்புத்தி” என்று பதிலளித்துள்ளார்.

 

You might also like More from author

%d bloggers like this: