கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய அஜித்

‘வீரம்’, ‘வேதாளம்’ என்று தொடர்ந்து ஹிட்டடித்துக் கொண்டிருந்த அஜித் சிவா காம்பினேஷன் யார் கண் பட்டதோ தெரியவில்லை ‘விவேகம்’ படுதோல்வியடைந்தது. அது போதாது என்று விமர்சகர்கள் அஜித்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். ரசிகர்களோ ‘’அஜித் இனி சிவா இயக்கத்தில் நடிக்கக் கூடாது’’ என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருந்தது. அது ‘விவேகம்’ படத்தின் ரிலீசிற்கு முன்பே சிவாவிடம் தன் அடுத்த படத்தையும் நீங்களே இயக்குங்கள் என்று வாக்குக் கொடுத்துவிட்டார் அஜித்.

இப்போது அஜித் ரசிகர்கள் விருப்பத்தின் பேரில் வேறு இயக்குனரை ஒப்பந்தம் செய்வாரா அல்லது சிவாவிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவாரா என்று கேள்வி எழுந்தது. ஆனால் அஜித் மற்ற ஹீரோக்களைப் போலல்லாமல் மீண்டும் சிவாவிற்கே வாய்ப்புக் கொடுத்து தன் வாக்கைக் காப்பற்றியுள்ளார்.

இந்தப் படத்தை ‘விவேகம்’ தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. ‘சிறுத்தை’ ஸ்டைலில் இப்படத்தை ஆக்ஷன் படமாக உருவாக்க நினைத்த சிவா இதில் அஜித்தை ‘சிறுத்தை’ கார்த்தி போல அதிரடி போலீஸாக காட்டப் போகிறாராம்.

You might also like More from author

%d bloggers like this: