ரீமேக் படத்தில் நடிக்க ஆர்வமாக காட்டும் தமன்னா!

தெலுங்கில் வெளியாகி ஹிட்டான பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தமன்னா ரொம்பவே ஆர்வமாக உள்ளார்.

கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற ரொமான்டிக் காமெடி படமான பெல்லி சூப்புலு படத்தை தமிழில் கௌதம் மேனன் தயாரிக்கிறார். சமீபத்தில் கௌதமை சந்தித்து நடிகை தமன்னா படம் குறித்து விரிவாக உரையாடியுள்ளார். படத்தில் நடிப்பதற்கு தமன்னாவிடம் அணுகியபோதே மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனடியாக ஒத்துக்கொண்டுள்ளார். கௌதமுடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழில் வெளியான ராஜதந்திரம் படத்தை தயாரித்த செந்தில் வீராசாமி இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ராஜதந்திரம் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கௌதம் தனுஷை வைத்து இயக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். பெல்லி சூப்புலு தமிழ் ரீமேக்கில் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த வருடம் தமன்னாவிடம் அதிக படங்கள் இருக்கின்றன. சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பாகுபலி II, ஹிந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கும் குயின் படத்திலும் நடிக்கிறார்.

You might also like More from author

%d bloggers like this: