அம்மாவாக நடிக்க எனக்கு தயக்கமில்லை” தன்ஷிகா ஓபன் டாக்

0

கபாலி படத்தில் தன்னுடைய முரட்டுத்தனமான கதாபாத்திரத்தால் அனைவரையும் கவர்ந்த தன்ஷிகா அதற்கு நேர்மாறாக எங்க அம்மா ராணி படத்தில் நடித்துள்ளார்.

மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தன்ஷிகா நடித்திருக்கிறார். கபாலி நடித்துக்கொண்டிருந்த போது இப்படத்தின் இயக்குநர் பாநி தன்ஷிகாவிடம் எங்க அம்மா ராணி படத்தின் கதையை சொல்லி இருக்கிறார். மதுரையை சேர்ந்த துளசி எனும் பெண் தன் பெற்றோர் எதிர்க்கும் காதலனை திருமணம் செய்து மலேசியாவுக்கு இடம் பெயர்கிறார். திடீரென ஒரு நாள் மலேசியாவில் அவர் கணவன் வேலை நிமித்தமாக வெளியே செல்லும் போது காணாமல் போய்விட அதன்பின் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை எங்க அம்மா ராணி படத்தில் சொல்லி இருப்பதாக தன்ஷிகா கூறியுள்ளார்.

 துளசி கதாப்பாத்திரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாக நடித்துள்ளதாகவும், சிறிதும் தயக்கமின்றி ஒத்துக்கொண்டதாகவும் தன்ஷிகா கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தின் இறுதியில் எதிர்பாராத டுவிஸ்ட் இருப்பதாகவும் படத்தை பற்றி தன்ஷிகா கூறியுள்ளார். இவர் நடிகர் கலையரசனுடன் காலக்கூத்து எனும் படத்தில் நடித்துவருகிறார். மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கலையரசனுடன் உரு எனும் த்ரில்லர் படத்திலும் தன்ஷிகா நடித்து வருகிறார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.