முதல் நாளே 6௦ கோடி வசூல் – மெகா ப்ளானில் ‘மெர்சல்’

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் என்றாலே ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்தான். அந்தக் கொண்டாட்டத்தைப் பணமாக்குவதுதான் தயாரிப்பாளரின் வேலை. அந்த வேலையை கனகச்சிதமாக முடிக்கப்போகிறதாம் மெர்சல் படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ். 13௦ கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் முதல் நாள் வசூலே மினிமம் 60 கோடிகளாவது இருக்க வேண்டும் என்பதுதான் இலக்காம்.

உலகம் முழுக்க 3292 தியேட்டர்களில் ரிலீஸாகிறது மெர்சல். எனவே முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் விஜய் ரசிகர்களும், போட்டிக்கு எந்தப் பெரிய படமும் வராததால் மெர்சலையே பார்த்துவிடுவோம் என்று பொதுவான சினிமா ரசிகர்களும் இருப்பதால் 3292 தியேட்டர்களில் முதல் நாள் தியேட்டர் இருக்கைகள் முழுவதும் நிரம்பினாலே சாதாரணமாகவே 75 முதல் 8௦ கோடிகள் வசூலைக் குவிக்க வாய்ப்புகள் அதிகம். கொஞ்சம் முன்பின் ஆனாலும் கூட 6௦ கோடி வசூல் உறுதிதான் என்று தெம்பில் இருக்கிறார்களாம் தயாரிப்பு தரப்பு.  

You might also like More from author