மீண்டும் ரிலீசாகி வசூலைக் குவிக்கப்போகும் ‘தரமணி’

கற்றது தமிழாகட்டும், தங்க மீன்களாகட்டும் விமர்சகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் விநியோகஸ்தர்கள் வயிற்றில் புளியைத்தான் கரைத்தன. ஆனால் அந்த விதியை மாற்றி விமர்சகர்கள், தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோருக்கும் வசூல் ரீதியாக மகிழ்ச்சியை கொடுத்த படம்தான் அவர் இயக்கிய ‘தரமணி’. இந்தப் படத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசான இந்தப் படம் வசூலைக் குவித்தாலும் ‘விவேகம்’ வந்ததால் விவேகமே இல்லாமல் இப்படத்தை அவசரப்பட்டுத் தூக்கிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள். அதற்குப் பிராயசித்தமாக தயாரிப்பாளர் ஜேஎஸ்கே இன்று ரிலீஸ் செய்யும் ‘தரமணி’யை அமோகமாக வரவேற்று, மீண்டும் திரையிட்டிருக்கிறார்கள்.

சென்னை உட்பட மொத்தம் 6௦க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘தரமணி’ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

%d bloggers like this: