ஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே ஜோடியின் 1௦௦% காதல்

ஆந்திராவில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘100% லவ்’. 2011-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியும், வரவேற்பையும் பெற்ற இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. கமர்ஷியல் இயக்குனர் என்ற பெயரெடுத்த சுகுமார் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் சுகுமார் அதே படத்தை தமிழில் ரீமேக்  செய்ய ஆசைப்பட்டார். அதன் விளைவாக முதல் முறையாக தமிழில் அதே படத்தை ‘1௦௦% காதல்’ என்ற பெயரில் தயாரிக்கிறார். இப்படத்தில் நாயகனாக நடித்து, இசையமைக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். நாயகியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார். எம்.எம். சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முதல் முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு. 2018 ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.

You might also like More from author

%d bloggers like this: