விக்ரமால் மன உளைச்சலில் சிவகார்த்திகேயன்

‘வாலு’ வெற்றிப் படத்தைக் கொடுத்த விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வழக்கமாக எல்லாப் படங்களிலும் கவர்ச்சியை வாரி வழங்கும் தமன்னா இதில் குடும்பப் பெண்ணாக அடக்கி வாசித்திருக்கிறாராம். இந்தப் படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று ரிலீஸாகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார்கள் தயாரிப்பாளர்கள்.

‘ஸ்கெட்ச்’சின் ரிலீஸ் நியூஸை கண்டு மிரண்டு போயிருக்கிறார்கள் ‘வேலைக்காரன்’ குழுவினர். காரணம் பலமுறை தள்ளிப்போன ‘வேலைக்காரன்’ படத்தை அதே கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் செய்யலாம் என்றிருந்த வேளையில் ‘ஸ்கெட்ச்’ ரிலீஸ் அறிவிப்பு சிவகார்த்திகேயனை மன உளைச்சலின் உச்சத்திற்கேக் கொண்டு சென்றுள்ளது.

You might also like More from author