‘’காலா படத்தில் என் கேரக்டருக்கு வேலையே இல்லை’’ – அஞ்சலி பாட்டில்

‘கபாலி’ படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம்தான் ‘காலா’. நானா படேகர், ஹ்யூமா குரோஷி, சமுத்திர கனி உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி பாட்டீல் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்று படத்தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. ஆனால் ‘’எனக்கு அப்படத்தில் பெரிதாக வேலை இல்லை’’ என்று சொல்லியுள்ளார் அஞ்சலி பாட்டில்.

நான் இந்த படத்துக்காக ஒப்பந்தமானபோது, எனது திறமையைக் காட்ட இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பிருக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் நடிக்கும் உற்சாகம் எப்படியிருக்கும் என்பதை உணரவே இதை ஒப்புக்கொண்டேன். அவருடன் இணைந்து நடிக்கும் அனுபவத்துக்காக ஒப்புக்கொண்டேன்.

தமிழ் சினிமாவின் வேலை செய்யும் முறை வித்தியாசமாக இருக்கிறது. ஆரம்பத்தில் எனக்கு சிறிது கடினமாக இருந்தது. ஆனால் இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொருநாளும் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கவே 500க்கும் அதிகமான மக்கள் திரண்டுவிடுவார்கள். அவர்கள் நடுவில் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: