சித்தார்த்துக்கு வெற்றியை ‘அவள்’ தருவாளா…?

பிரம்மாண்ட இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் முன்னணி ஹீரோவாக முடியாமல் அவதிப்படுபவர் சித்தார்த். மணிரத்னம் படத்தில் நடித்தும் கூட சோபிக்காமல் போனது இவரது துரதிர்ஷ்டமே. போன வருடம் ‘ஜில் ஜல் ஜங்’ என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்தாலும் வெற்றி பெறாமல் போய்விட்டார். இந்நிலையில் தனது நண்பரும், மணிரத்னத்தின் உதவியாளருமான மிலிந்த் இயக்கத்தில் ‘அவள்’ எனும் ஹாரர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான வயாகாம் தயாரித்துள்ளது. சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சித்தார்த் பேசும்போது,

‘’நானும், இயக்குனர் மிலிந்தும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக ஒன்றாக வேலை பார்த்தோம். எங்கள் நட்பு 17 வருடங்களைத் தாண்டியது. இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஓர் உண்மைக்கதையை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறோம். மைனஸ் 10 டிகிரி குளிரில் ஒரு மாதம் வரை இமாச்சல பிரதேசத்தில் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.

நல்ல ஒரு பேய் படத்தை எடுத்து மக்களை பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. இந்தப் படம் கண்டிப்பாக பார்ப்பவர்களை பயமுறுத்தும். அந்த அளவுக்கு ஹாரர் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்துக்கு பின் இயக்குனர் மிலிந்த் பேசப்படுவார். ஒரு காட்சியில் கூட கிராபிக்ஸ் பயன்படுத்தவில்லை.

மூளை அறுவை சிகிச்சை நிபுணரும், அவருடைய மனைவியும் ஓய்வுக்காக பனிமலை பிரதேசத்துக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்களது பக்கத்து வீட்டுக்கு ஜெனி என்ற பெண்ணுடன் பெற்றோர்கள் குடியேறுகிறார்கள். அந்த பெண்ணின் பிரச்சினை எப்படி இவர்களையும் பாதிக்கிறது என்பது தான் திரைக்கதை.

நாயகி ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை. அவர் படத்தின் மிகப்பெரிய தூண். ‘ரங்தே பசந்தி’ படத்துக்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து இந்தப் படத்தில் அதுல் குல்கர்னியும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம்.

‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் வேலை செய்த டீம் இதிலும் பணியாற்றி இருக்கிறது. இப்படி ஒரு பெரிய பட்ஜெட் பேய் படத்தை நாங்கள் எடுத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம்’’ என்றார்.

You might also like More from author

%d bloggers like this: