”கோலிவுட்டை உற்று நோக்கும் பாலிவுட்” – அதுல் குல்கர்னி

கமல்ஹாசன் இயக்கிய ‘ஹே ராம்’ படத்தில் அறிமுகமானவர் அதுல் குல்கர்னி. அந்தப் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். மேலும் ‘ரன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சித்தார்த், ஆண்ட்ரியா நடித்திருக்கும் ‘அவள்’ எனும் ஹாரர் படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் பேசியபோது,

‘’சென்னை எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். ஏனென்றால் இந்த சென்னை தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. கமல் அவர்கள் தான் ‘ஹேராம்’ படத்தில் என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தினார். ’ரங்தே பசந்தி’ படத்துக்கு பின் 12 வருடங்கள் கழித்து சித்தார்த்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி.

எப்போதுமே நல்ல சினிமா நல்ல ஒரு குழுவால் தான் உருவாகிறது. இந்தி சினிமா எப்போதும் தமிழ் சினிமாவை உற்று கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது. தொழில்நுட்பம், இசை போன்றவற்றில் தமிழ் சினிமா எப்போதும் முன்னோக்கியே இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ‘அவள்’ படம் வெளியாக இருக்கிறது. இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான ஹாரர் படமாக இருக்கும்’’ என்றார்.

 

You might also like More from author

%d bloggers like this: