‘’கமலும், ரஜினியும் மோடியை சந்திக்க வேண்டும்’’ பிரபல இயக்குனர் வேண்டுகோள்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை வரி, சில சுயநல திரையரங்க உரிமையாளர்களின் சூழ்ச்சியால் டிக்கெட் விலை ஏற்றம் என ஒரேடியாக தமிழ்த் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனை களைய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ‘நேரம்’, ‘ப்ரேமம்’ படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது கருத்துத் தெரிவித்துள்ளார். ‘’சூதாட்டத்தையும், சினிமாவையும் ஒரே ஜிஎஸ்டி வரியில் வைத்திருப்பது சரியா…? ரஜினியும் கமலும் இதுபற்றி வாய் திறக்க வேண்டும். அவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து ஜிஎஸ்டி பற்றிப் பேச வேண்டும். அவர்கள் மனது வைத்தால் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினால் நிச்சயம் திரையுலகையும், ரசிகர்களையும் காப்பாற்றும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: