ரஜினி, கமலை தாத்தாக்கள் என்று கிண்டலடித்த கஸ்தூரி

கஸ்தூரியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஏற்கனவே அவர் இரண்டு முறை ரஜினிகாந்தை கலாய்த்துத் தள்ள, கண்டிக்க வேண்டிய ரஜினியோ கஸ்தூரியை வீட்டிற்கே வரவைத்து அவரிடமெல்லாம் தன் அரசியல் ஆலோசனையை கேட்டார். ஆனால் அதையே அட்வான்சாக எடுத்துக் கொண்ட கஸ்தூரி அஜித்தின் ‘விவேகம்’ படத்தையும் மறைமுகமாகக் கிண்டல் அடித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் தாத்தாக்கள் என்று சொல்லி கேலி பேசியிருக்கிறார்.

அதாவது நடிகை சமந்தா, நாக சைதன்யாவின் திருமண போட்டோக்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், ‘’திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன்’’ என்று சமந்தா தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டு கஸ்தூரி, “திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து உள்ளார். அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் கேட்கல?” என்று கேள்வி எழுப்ப, இதற்கு கஸ்தூரியை டிவிட்டரில் ஃபாலோ செய்பவர், “உங்க கூட நடித்த ரஜினியும் கமலும் இன்னும் நாயகனாக நடிக்கிறார்கள். உங்களால் முடியல. அந்த காரணம் தான்” என்று பதிலளித்தார்.

இதற்கு கஸ்தூரி, “ஆனால் ஏன்? அதுதான் என் கேள்வி. தாத்தாக்கள் நாயகர்களாக நடிப்பதை ஒப்புக்கொள்ளும் நாம், இளம் பெண்கள் திருமணம் ஆனதும் (நாயகிகளாக) ஒப்புக்கொள்வதில்லை? ஏன்? ஏன்? ஏன்?” என்று பதிலளித்து இருக்கிறார்.

கஸ்தூரியின் இந்த டிவிட்டால் ரஜினி, கமலின் ரசிகர்கள் கஸ்தூரியை வசை பொழிந்து வருகின்றனர்.

You might also like More from author

%d bloggers like this: