‘’டிக்கெட் விலை உயர்வை பெரிய ஹீரோக்கள் கண்டுக்கமாட்டார்கள்’’ – பிரசன்னா

மாநில அரசு 25% டிக்கெட் விலை உயர்வு செய்துள்ளதால் அதிருப்தியிலுள்ள திரையுலகினர் ஒவ்வொருவராக தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். எஸ்.ஆர்.பிரபு, சீனு ராமசாமியை தொடர்ந்து நடிகர் பிரசன்னாவும் அதிருப்தி தெரிவித்ததோடு முன்னணி நடிகர்களையும் லேசாக சாடியுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்

‘’எந்த பெரிய படத்தைச் சேர்ந்தவர்களும் பேசப்போவதில்லை ஏனென்றால் எப்படியும் அவர்கள் படம் ஓடிவிடும். இது சிறிய படங்களுக்கு மட்டுமே சாபமாக இருக்கும். இந்த பிரச்சினையை நினைத்து கவலையாக இருக்கிறது. 10 வருடங்கள் கழித்து விலை உயர்வை நியாயப்படுத்துகிறோம் என்றால் பார்க்கிங், உணவு பண்டங்கள் விலையை நியாயமாக குறைக்க வேண்டும். எல்லோருக்கும் பேராசை. யாருக்கும் லாபத்தை விட்டுத்தர மனமில்லை. இது துறையைக் கண்டிப்பாக சாகடிக்கும்.

ரசிகர்களை திரையரங்குக்கு கொண்டு வர வழிகள் தேடிக்கொண்டிருக்கும்போது அவர்களை அங்கிருந்து விலக்கி வைக்க விஷயங்கள் நடக்கின்றன. கலகம் பிறந்திருக்கிறது. விடிவு…?’’ என்று கடுமையாக வருத்தம் தெரிவித்துள்ளார் பிரசன்னா.

You might also like More from author

%d bloggers like this: