‘’சினிமா டிக்கெட் விலை உயர்வால் ஏழை மக்களுக்கு பாதிப்பு’’ – சீனு ராமசாமி

கேளிக்கை வரி, டிக்கெட் விலை 25% ஏற்றம் என அரசின் சினிமாவை நசுக்கும் இந்த நடவடிக்கைக்கு தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

‘’தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகி விட்டது. இதனால் நியாயமாக பார்க்க முடியாத மக்களால் சினிமா தொழில் அழிய நேரும். அதிக கட்டணத்தால் வெகுஜன மக்களுக்கு தியேட்டர் என்றாலே அலர்ஜிஆகும், உற்பத்தி விநியோகம், தொழிலாளர்கள் ஏன் தமிழ் ராக்கர்ஸுக்கும் பாதிப்புதான். நகர மால்களில் சினிமா பார்ப்போரை ஊக்கப்படுத்த ஜனங்களுக்கு பாதி பார்க்கிங் கட்டணமும், பாப்கார்ன் நியாயமான விலையில் தர அன்போடு வேண்டுகிறேன்’’ எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: