இயக்குனர் ஷங்கரை பாராட்டிய ரஜினிகாந்த்

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் படம்தான் 2.O. இந்தப் படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஷங்கர் 3Dயில் உருவாக்கியுள்ளார். இதனால் ரசிகர்களுக்கு விஷுவல் விருந்து வைத்துள்ளாராம் ஷங்கர். இந்தப் படத்தின் 3D காட்சிகளை பார்த்த ரஜினிகாந்த் மிரண்டே போய்விட்டாராம்.

‘’இயக்குநர் ஷங்கர் முப்பரிமாணத்தை (3D) மனதில் வைத்துதான் இக்கதையை எழுதியிருக்கிறார். படத்தில் நான் தோன்றும் முதல் 3D காட்சியை மானிட்டரில் மெய்மறந்து பார்த்தேன். அது ஒரு பிரம்மாண்ட அனுபவம். ஷங்கரை பாராட்டுகிறேன். எந்த ஒரு 3-டி பிரம்மாண்ட ஹாலிவுட் படத்துக்கும் இந்தப் படம் சளைத்து அல்ல. மக்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்’’ என்று ஷங்கரைப் புகழ்ந்துத் தள்ளியிருக்கிறார் ரஜினிகாந்த்.

You might also like More from author

%d bloggers like this: