‘அதே கண்கள்’ படத்திற்கு ‘யு’சான்றிதழ்

கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதே கண்கள்’படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

அறிமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன் நடிப்பில் உருவான படம் ‘அதே கண்கள்’. இந்த படத்தை சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் நாயகியாக ‘நெடுஞ்சாலை’ஷிவதா நடித்துள்ளார். படத்தில் இன்னொரு நாயகியாக ‘அவன் இவன்’நாயகி ஜனனி அய்யர் நடித்துள்ளார்.

 மேலும் படத்தில் பாலசரவணன் காமெடியில் நடித்துள்ளார். ’அதே கண்கள்’படத்தின் அனைத்து பணிகளும் கடந்த மாதமே முடிவடைந்துவிட்டது. பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு வேலைகளை முன்கூட்டியே முடித்தனர். ஆனால் பொங்கலன்று விஜய், சூர்யா படங்கள் வெளியாவதால் இந்தப் படத்தை பிப்ரவரிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதனையொட்டி அதே கண்கள் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. காதல், த்ரில்லர் ரக படமாக உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர், ‘யு’சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

You might also like More from author