‘’நாளை ஷூட்டிங் கிடையாது’’ – காரணம் இதுதான்

சென்னை காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

‘’தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ம் ஆண்டு பொதுக்குழு 8-ம் தேதி மதியம் 2 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் மூத்த மற்றும் முன்னணி திரைப்பட, நாடக நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வசதியாக படப்பிடிப்புக்கு விடுமுறை விடவேண்டும் என்று நடிகர் சங்கம் சார்பில் வேண்டு கோள் விடுத்திருந்தனர். அந்த வேண்டுகோளின்படியும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படியும் அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன’’ என்று கூறப்பட்டுள்ளது.

You might also like More from author