55 நாடுகளில் ரிலீஸாகும் ‘பைரவா’

இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா திரைப்படம், உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாகிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிப்பில், பரதன் இயக்கியுள்ள பைரவா திரைப்படம், பொங்கல் பண்டிகையின்போது வெளியாகிறது. இந்த படம், தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், முதல்முறையாக, உலகம் முழுவதும் 55 நாடுகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 இதன்படி, வரும் 12ம் தேதி தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் பைரவா வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, போலந்து, நைஜீரியா, கானா, கென்யா உள்பட 55 நாடுகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதன்மூலமாக, கபாலி, தெறி, வேதாளம் போன்ற படங்களின் வசூலை பைரவா எளிதில் முறியடித்து, புதிய சாதனை படைக்கும் என்று, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like More from author