சுசி கணேசனின் ‘திருட்டுப் பயலே 2’ நவம்பரில் ரிலீஸ்

2௦௦6-ஆம் ஆண்டு இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ், மனோஜ் கே ஜெயன், விவேக் மற்றும் பலர் நடித்து மிகப் பெரிய வெற்றியடைந்த படம்தான் ‘திருட்டுப் பயலே’. இந்தப் படம்தான் AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த முதல் படமாகும்.

இந்நிலையில் இதே நிறுவனத்தின் தயாரிப்பில் சுசி கணேசன் ‘திருட்டுப் பயலே 2’ படத்தை இயக்கியுள்ளார். பிரசன்னா, பாபி சிம்மா, அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை நவம்பர் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம். கள்ளக்காதல் கதையை இன்றைய காலகட்டத்திற்கேற்ப திரைக்கதை அமைத்து, இயக்கியுள்ளாராம் சுசிகணேசன். ஏற்கனவே இப்படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

%d bloggers like this: