கவுதம் மேனன் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்…!

கவுதம் மேனன் தயாரிக்கும் திரைப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ’பெல்லிசூப்புலு’ திரைப்படம் அங்கு சக்கை போடு போட்டது.கடந்த ஆண்டு வெளியாகி,நல்ல லாபத்தை கொடுத்த படங்களில் இந்த படம் முதலிடம் பிடித்தது.கடும் போட்டிகளுக்கு இடையே இந்த படத்திற்காக தமிழ் உரிமையை,கெளதம் வாசுதேவ் மேனன் பெற்றார்.

 இந்நிலையில் பெல்லிசூப்புலு படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தமன்னா,”பெல்லிசூப்புலு படத்தை நானும் பார்த்தேன்.மிகவும் சிறப்பான படம்.இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பது எனக்கு கிடைத்த பரிசு.மேலும் கெளதம் மேனனின் கீழ் பணிபுரிய ஆர்வமாக இருக்கிறேன்.”என கூறியுள்ளார்.

கெளதம் மேனனின் உதவியாளரான செந்தில் வீராச்சாமி இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like More from author