டி.ராஜேந்தரின் திமிர்ப் பேச்சு கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

மீரா கதிரவன் இயக்கி, விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, தன்ஷிகா, பேபி சாரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘விழித்திரு’. இந்தப் படத்தில் தன்னைத் தானே ‘சகலகலா வல்லவன்’ என்று அழைத்துக் கொள்ளும் டி.ராஜேந்தர் ஒரு பாடலுக்குக் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனைவருமே கலந்துகொண்டனர். நடிகை தன்ஷிகா பேசும்போது அனைவருக்கும் நன்றி கூறியவர் டி.ராஜேந்தர் பெயரை மறந்துவிட்டார்.

இதனால் வெகுண்டெழுந்த டி.ராஜேந்தர் ‘’அதெப்படி என பெயரை நீ மறக்கலாம். நான் எவ்வளவு பெரிய அப்பாட்டக்கர் தெரியுமா.. உனக்கெல்லாம் மேடை நாகரிகம்னு ஒண்ணு தெரியுமா…?’’ என்ற ரேஞ்சில் தன்சிகாவை மகாமட்டமாக விமர்சிக்க ஆரம்பித்தார். உடனே தன்சிகா ‘’நான் பதட்டத்தில் உங்கள் பெயரை மறந்துவிட்டேன். உங்கள் மேல் பெரிய மரியாதை எனக்கிருக்கிறது’’ எனக் கூறியதோடு மட்டுமில்லாமல் அவர் காலில் விழுந்தும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆனால் அப்பவும் திமிர் குறையாத டி.ராஜேந்தர் மீண்டும் அவரை கேவலமாகத் திட்ட ஆரம்பித்ததும் கண்கலங்கி அழ ஆரம்பித்தார் தன்சிகா.

டி.ராஜேந்தரின் இந்த கொடூரமான குணத்தைக் கண்டு சமூக வலைத்தளங்களில் கெட்ட வார்த்தைகளால் திட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

You might also like More from author

%d bloggers like this: