‘ஸ்பைடர்’ – விமர்சனம்

விஜயகாந்த், சிரஞ்சீவி, அஜித், விஜய், சூர்யா, அமீர்கான் என மாஸ் ஹீரோக்களை இயக்கிய முருகதாஸ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து இயக்கியுள்ள படமே ‘ஸ்பைடர்’.

கதை

இன்டலிஜென்ஸ் பீரோவில்  பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கும் கால் ட்ராப்பிங் வேலை செய்கிறார் மகேஷ்பாபு. அதேசமயம் தனக்கென்று ‘ஸ்பைடர்’ என்ற சாப்ட்வேரை உருவாக்கி, பொதுமக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில்  அதை முன்பே சென்று தடுக்கிறார். அப்படி ஒரு சமயத்தில்  இறந்தவர்களினுடைய உறவினர்களும் நண்பர்களும் அழுகின்ற குரல்களைக் கேட்டு ரசிக்கும் சாடிஸ சைக்கோ எஸ்.ஜே.சூர்யாவை பிடிக்கிறார. அப்போது அவன் தன் கொடூரமான செயல்திட்டங்களை விவரித்து, உன்னால் முடிந்தால் தடுத்துப்பார் என்று சவால் விட, அவன் தீட்டி வைத்திருக்கும் கொடூரமான திட்டங்களை ஸ்பைடர் தடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

‘துப்பாக்கி’ படம் போலவே கதை ஆரம்பிப்பதற்கு ஒரு பத்து நிமிடங்கள் ஆகிறது. அதன்பிறகு வழக்கமான ஏ.ஆர்.முருகதாஸ் பாணி சரவெடிதான். வில்லனை புத்திசாலித்தனமாக சேஸ் செய்து கண்டுபிடித்து நெருங்குவது, ஹீரோவிற்கு வில்லன் புத்திசாலித்தனமாக செய்யும் கொலைகள், வில்லனிடமிருந்து தனது உறவுகளை காப்பாற்றும் ஹீரோவின் சமயோசித புத்தி என முருகதாஸின் முத்திரைகள் பளிச்சிடுகின்றன. ஆனால் ஏற்கனவே இன்னொரு முறை துப்பாக்கி படத்தைப் பார்ப்பதுபோலான ஃபீலிங்கைக் கொண்டு வந்தது உறுத்தல். க்ளைமாக்ஸ் இன்னும் பரபரப்பாக கன்வின்சிங்காக இருந்திருக்கலாம்.

தமிழில் முதல் முறையாக் அறிமுகமாகியிருக்கிறார் மகேஷ்பாபு. சத்தமில்லாமல் மென்மையாக, அதே சமயம் தீர்க்கமான குரலில் ஒலிக்கும் மகேஷ் பாபுவின் தமிழ் கேட்க இனிமையாக உள்ளது. தனது வழக்கமான தெலுங்கு ஹீரோயிசம் எதுவும் செய்யாமல் முருகதாஸின் திரைக்கதைக்கு உறுதுணையாக அடக்கியே வாசித்திருக்கிறார். மகேஷ்பாபு அமைதியாகப் பேசும்போதும், ஆவேசமாகப் பேசும்போதும் தமிழ் சினிமாவிற்கு ஒரு மாஸ் ஹீரோ கிடைத்துவிட்டார் என்று சொல்வதற்கேற்ப பிசிறே இல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் வசனம் பேசியுள்ளார்.

ஒட்டுமொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்தி அதக்களப்படுத்துவது எஸ்.ஜே.சூர்யாவால்தான். கீழ் உதட்டின் துடிப்பைக் குரூரமான புன்னகையாக மாற்றுவது, கண்ணில் வழியும் ஒற்றை துளி கண்ணீரை ஊதித் தள்ளுவது, ’’அப்போ ஒன்ஓ கிளாக் நீ வரலையா’’ என எள்ளலாகக் கேட்பது, க்ளைமேக்ஸில் துள்ளிக் குதித்து ஓடுவது என எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் ரசிக்க வைக்கிறது. டார்க் நைட்ஜோக்கரது பாத்திரத்தை நினைவுப்படுத்தும். அவருக்குரிய சிறு வயது ஃபிளாஷ்பேக் மிரட்டல். சின்ன வயது எஸ்.ஜே.சூர்யாவாக நடித்திருக்கும் சிறுவனுக்கு தேசிய விருதே கொடுக்கலாம். மிரட்டலான நடிப்பு.  

ஹீரோயின் ராகுல் ப்ரீத் சிங். வழக்கமான லூசுப் பெண் கேரக்டர். இருந்தாலும் தனது கேரக்டரை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். மப்பும் மந்தாரமுமாக இருக்கும் அவரது கவர்ச்சி உடல் இளைஞர்களை பல நாட்களுக்குத் தூங்கவிடாது.

பரத்தின் கேரக்டர் சர்ப்ரைஸ். அவர் நடிப்பும் குட்.

ஆர்.ஜே.பாலாஜி, ஜெயப்பிரகாஷ், பிச்சைக்காரன் அம்மா

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் சில இடங்களில் சொதப்பினாலும் மற்ற இடங்களில் எல்லாம் விறுவிறுப்பைக் கூட்டுகிறார்.

சந்தோஷ் சிவனின் கேமராவும், ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கும் விறுவிறுப்புக்கு உத்தரவாதம்.

எல்லாப் படங்களிலும் சமூகக் கருத்து சொல்லும் முருகதாஸ் இப்படத்தில் மனிதாபிமானத்தை தனது வழக்கமான பாணியில் சொல்லியிருப்பது அருமை.

மொத்தத்தில்

‘ஸ்பைடர்’ – உற்சாகப்படுத்தும் ரோலர் கோஸ்டர்.

You might also like More from author

%d bloggers like this: