அறிவழகன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ என இயக்கும் படங்களிலெல்லாம் கவனம் ஈர்ப்பவர் இயக்குனர் அறிவழகன். கடைசியாக இவர் இயக்கிய ‘குற்றம் 23’ வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் அருண் விஜய்க்கு ஹீரோவாக ஒரு முழுமையான முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் அறிவழகன்.

இந்நிலையில் அறிவழகன் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்தார். தன்னுடைய அடுத்த படத்தில் நயன்தாராவை இயக்குகிறார். இது ஒரு சைக்காலஜிகள் த்ரில்லர் படமாக உருவாகிறதாம். முதல் முதலாக ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் சோலோவாக நடிப்பது நயன்தாராவிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

You might also like More from author

%d bloggers like this: