ஜீவா, ஜெய் இணையும் சுந்தர் சி.யின் ‘கலகலப்பு 2’

2௦12-ஆம் ஆண்டு விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் நடிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றிப் பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. எத்தனையோ காமெடி ஹிட் படங்களை சுந்தர் சி தந்திருந்தாலும் ‘கலகலப்பு’தான் ‘உள்ளத்தை அள்ளித்தா’விற்கு அடுத்த இடத்தில் உள்ளது. அந்தளவிற்கு விமல், சிவா, சந்தானம் அடித்த லூட்டியால் தியேட்டரே குலுங்கியது.

தற்போது மீண்டும் ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்த சுந்தர் சி அதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பித்துவிட்டார். ஆனால் முதல் பாகத்தில் நடித்த விமல், சிவா இதில் இல்லை. அவர்களுக்குப் பதில் முதல் முதலாக ஜீவாவும், ஜெய்யும் சுந்தர் சி இயக்கத்தில் இப்படத்தில் நடிக்கின்றனர்.

You might also like More from author

%d bloggers like this: