தொடர் வசூல் மழையில் ‘துப்பறிவாளன்’ மகிழ்ச்சியில் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் பலதரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட ‘துப்பறிவாளன்’ படத்தைப் பார்த்து மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் பாராட்டுத் தெரிவித்திருந்தார். இருந்தாலும் ‘துப்பறிவாளன்’ கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

படம் வெளியாகி நான்கு நாட்களில் 1௦ கோடி வசூலித்துள்ளது. ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு விஷால் படம் வெற்றிப் பெற்றதும், வசூலைக் குவித்ததும் ‘துப்பறிவாளன்’ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றியை குறித்து இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, ‘’படம் வெற்றி பெற்றது மிகவும் சந்தோசத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது’’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  

You might also like More from author

%d bloggers like this: