வெற்றி பெற்ற ‘துப்பறிவாளன்’ விரைவில் இரண்டாம் பாகம்

இயக்குனர் மிஷ்கினும், விஷாலும் முதல் முறையாக இணைந்த ‘துப்பறிவாளன்’ நான்கு நாட்களுக்கு முன் ரிலீசானது. மிஷ்கினுக்கும் சரி, விஷாலுக்கும் சரி எப்படியாவது ஒரு வெற்றிப் படம் தந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பதால் இருவருமே ‘துப்பறிவாளன்’ படத்திற்காகக் கடுமையாக உழைத்தனர். படமும் ரிலீசானது. வழக்கமான மிஷ்கின் படமாக அமைந்தபோதிலும் ரசிகர்களுக்காக கமர்ஷியல் வெற்றியை குறிவைத்து இயக்கியிருந்தார் மிஷ்கின்.

படம் ரிலீசான நாள் வியாழக் கிழமை என்பதால் மிஷ்கின், விஷால் ரசிகர்கள் மட்டுமே தியேட்டருக்கு வந்தார்கள். ஆனால் படத்தின் பாசிட்டிவ் ரிசல்ட்டால் வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரை பொதுவான சினிமா ரசிகர்களும் துப்பறிவாளனை கண்டுகளிக்கிறார்கள். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுவிட்டதால் உற்சாகமான மிஷ்கினும், விஷாலும் ஏற்கனவே சொல்லியதுபோல ‘துப்பறிவாளன்’ இரண்டாம் பாகத்தை எடுப்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்கள். இது பற்றிய அறிவிப்பை விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like More from author

%d bloggers like this: