50வது பிறந்தநாளை கொண்டாடும் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார். இசை பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததன் காரணமாக, குடும்ப பொறுப்பை ஏற்கும் நிலைக்கு ஆளானார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

1992ஆம் ஆண்டு தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். அதே ஆண்டு வெளியான மணிரத்னத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் அவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.

ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன.

அவர் தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக, ஃபேஸ்புக் லைவ் மூலம் உரையாடவுள்ளார். இன்று மதியம் 4.30 மணியில் இருந்து, 5 மணி வரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ரசிகர்களுடன் உரையாடவுள்ளார்.

You might also like More from author