பயந்த சிவகார்த்திகேயன் துணிந்த விஜய் சேதுபதி

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தை பல தேதிகளில் தள்ளி வைக்கப்பட்டு ஒரு வழியாக செப்டம்பர் 29 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருந்தனர். ஆனால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ ரிலீசாவதால் பயந்த சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ படத்தை டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று தள்ளி வைத்திருக்கிறார்.

ஆனால் பன்னீர் செல்வம் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ படத்தை செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்திருக்கின்றனர். சென்சாரில் U சான்றிதழ் பெற்றிருக்கும் ‘கருப்பன்’, ‘ஸ்பைடர்’ வந்தாலும் கவலைப்படமால் தனது படத்தின் கதையின் மீது நம்பிக்கை வைத்து துணிச்சலாக ரிலீஸ் செய்யவிருப்பதால் அனைவராலும் பாராட்டைப் பெற்று வருகின்றனர் விஜய் சேதுபதியும், இயக்குனர் பன்னீர் செல்வமும்.

You might also like More from author

%d bloggers like this: